hai friends welcome to my site

Railway Timings Map Schools & Colleges Banks & ATM
Computers Automobiles Electricals Cell cares Printers
Hopspitals Dispensaries

Monday, December 7, 2009

பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம்


நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் புகழ் பெற்ற தஞ்சாவூர் - கும்பகோணத்திற்கும் நடுவில் உள்ள தாலுகா நகரம் தான் பாபநாசம். இந்த நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா கொண்டாடிய பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் பல சிறப்புகளை கொண்டதாகும். சாதி, மத வேறுபாடின்றி இவ்வூர் மக்களின் புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்குகின்றார். இத் திருத்தலம் தோன்றிய 115 வது ஆண்டுப் பெருவிழாவானது இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 13,14,15ம் தேதிகளில் சிறப்பாக நடைபெறஉள்ளது.

புனித செபஸ்தியார் வரலாறு

புனித செபஸ்தியார் கிபி 285ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள நர்ப்போன் என்னும் நகரில் பிறந்தார்.

அக்காலத்தில் ரோமில் கிறிஸ்வர்கள் துன்பப்படுவதைக் கண்ட செபஸ்தியார் உதவிகரம் நீட்டினார். இன்றும் ரோமாபுரியில் உள்ள புனித செபஸ்தியார் கல்லறையில் ஆயிரைக்கனக்கான மக்கள் வழிப்பட்டு வருகின்றனர்.

திருத்தல வரலாறு
இத்திருத்தலம் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது . இத்திருத்தலத்தின் முதல் பங்கு தந்தையாக 1933ம் ஆண்டு. ஜே . சி . காப்பன் சுவாமிகள் பொறுப்பேற்றார்.

நூற்றாண்டு விழா:
1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல்
கோவில் முழுவதும். புதுப்பிக்கும் பணி நடைப்பெது. கோயிலுக்கு பின்புறம்
உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினர். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாக பீடங்கள் அமைத்தார். மர வேலைபாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை (சிலை) நிறுவியுள்ளார். மேலும் கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தி்ல் வைத்து சிறப்பித்துள்ளார்.

திருவிழாவின்சிறப்பு :
ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.